Categories
உலகசெய்திகள்

“இதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு…!!!!

பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது தனது உரையின் போது அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் சீனா ரஷ்யா பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி பேசினார். இதனை அடுத்து தனது பேச்சை முடிக்கும் போது பாகிஸ்தான் தான் உலகில் ஆபத்தான நாடுகளில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

Categories

Tech |