Categories
அரசியல்

“இதுதான் எனக்கு வேத வாக்கு. மற்றவர்களின் வாக்கு என்ன என்பதை நான் சொல்லவில்லை”…? ஓபிஎஸ் பேச்சு…!!!!!

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவ சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், jcd பிரபாகரன் போன்ற ஏராளமானோர் மரியாதை செலுத்தியுள்ளனர். அதன்பின் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாதாரண கிராமப்புறங்களில் பிறந்தவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றியை கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கப்பட்டு ஆலமரமாக வளர்ந்துள்ளது. மேலும் அவருக்கு அதிமுக சார்பாக இதே பூர்வமான புகழஞ்சலி செலுத்தினேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து பற்றி பேசிய அவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவருடன் உடன் இருந்து பயணம் மேற்கொண்டவர். ஐநா சபையில் உரையாற்றிய பெருமையை அதிமுகவிற்கு பெற்று தந்தவர்.

மேலும் அரசியல் காரணங்களுக்காக பல பேர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதை புறந்தள்ளி அவரது தொண்டையும் தியாகத்தையும் மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும். தான் ஜெயலலிதாவோடு 21 வருடம் பணியாற்றியவன் பலமுறை என்னை பற்றி அவர் மனதில் உள்ளதை கூறிக் கொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை ஜெயலலிதாவின் வாக்கு தான் எனக்கு வேதவாக்கு மற்றவர்களின் வாக்கு என்ன என்பதை நான் சொல்லவில்லை. மேலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் அரசு அவர்களது கடமையை செய்கிறது. நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு என தெரிவித்துள்ளார். திமுக அரசு உங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காது குறித்த கேள்விக்கு எனக்கு ஜெயலலிதா இரண்டு முறை அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார். 13 வருடங்களுக்குப் பின் முதல்வராக பதவியை தந்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசம் மிக்க தொண்டனாக தான் பணியாற்றினேன். தலைவர் என்ற நிலைக்கு என்றுமே சென்றதில்லை. எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக அதிமுகவை தொடங்கினாரோ ஜெயலலிதா வளர்த்தாரோ அதனுடைய அடிப்படை எந்த நேரத்திலும் சிதைந்து விடாமல் காப்பாற்றுவது எங்களைப் போன்ற அதிமுக தொண்டர்களின் கடமை எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |