சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என திமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடம் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ராஜ்யசபா எம்பி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் பதவியேற்றது உங்கள் அம்மாவுக்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், உங்கள் பொறுப்பு அதிகமாகியுள்ளது. மக்களிடம் நல்ல பெயரையும் புகழையும் பெற வேண்டும் என்பதை என்னுடைய விருப்பம், அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன் என கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.