Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் என் ஆசை”..? பத்திரிக்கையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை ஓபன் டாக்…!!!!

பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்து பேசியுள்ளார். இதற்கு முன் ஐடியில் பணிபுரிந்ததாகவும் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் இந்த நிலையில் இவர் கடந்த 13 வருடங்களாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றார். கடந்த 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்த சூழலில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது நான் நடிகையாக வேண்டும் என நினைத்ததில்லை பத்திரிகையாளராக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் விருப்பம் பத்திரிக்கையாளர் பர்கா டுட்டால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன்.

மேலும் அவருடைய செய்தி வழங்கும் தன்மைக்கு நான் மிகப்பெரிய ரசிகை ஆனால் விதி வேறு திட்டம் வைத்துள்ளது.  டெல்லியில் நடிப்பு தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்றது அதில் நண்பர்களின் வற்புறுத்தலால் நான் கலந்து கொண்டேன் இந்த நிலையில் முதல் சுற்றில் தேர்ச்சி அடைந்த என்னை மும்பை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து சுற்றுகளையும் நான் தேர்ச்சி பெற்றதால் நடிகையாக மாறும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன் பின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது அதன் பின் பழகிவிட்டது இப்படித்தான் நான் நடிகையாக மாறினேன். ஆனால் பத்திரிகையாக வேண்டும் என்பதே எனது கனவு என குறிப்பிட்டுள்ளார் முன்னணி ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார் மேலும் தற்போது அவர் சுயமாக செய்தி நிறுவனம் ஒன்றே நடத்திக் கொண்டிருக்கிறார்.

Categories

Tech |