மும்பையில் பிரபல பெண் மருத்துவர் பணிக்காக தன்னை அர்ப்பணித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளித்த பிரபல பெண் டாக்டர் மனிஷா ஜாதவ்(51) கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு பேஸ்புக்கில் தனது கடைசி குட்மார்னிங் இது என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு செய்து 36 மணி நேரத்தில் அந்த மருத்துவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் என்னால் மீண்டு வர இயலாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் உங்களை பார்க்க முடியுமா என தெரியவில்லை எனவே அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மருத்துவரின் இழப்பு பலரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.