Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் உள்ள பிரபல நாடு… சர்வதேச அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!

பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்கொள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்கவும், படைபலத்தை அதிகரிக்கவும் உதவுவோம் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாடு பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி கப்பல் வாங்குவதற்காக மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து 12 நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அந்தத் திட்டத்தில் சிறிது காலதாமதம் ஏற்பட்ட காரணத்தினால் பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இதனால் பிரான்சுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பிரான்ஸ் ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் கொண்டிருந்த நட்புறவையும் பார்க்காமல் தற்போது தனது நாட்டு தூதர்களை இரு நாட்டிலிருந்தும் திரும்ப பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆக்கஸ் கூட்டமைப்பு ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி கப்பல் கட்டுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு தான் பிரான்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா பிரான்சின் கோவத்தை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அமெரிக்காவினுடைய தற்போதைய நடவடிக்கைகள் தங்களது நட்புறவை அந்நியபடுத்தியதாகவே பிரான்ஸ் நாடு கூறுகிறது. மேலும் சர்வதேச அரசியலில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்சின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |