வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில் குயின்ஸ்லேண்ட் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளியை கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என கடந்த மாதம் போலீசார் அறிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ரஜ்விந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் நாய் இவரை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஜ்விந்தர் சிங் கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் நாயை ஒரு மரத்தில் கட்டி போட்டு விட்டு சடலத்தை கடற்கரை மணலில் புதைத்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்து பஞ்சாபில் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.