பாரீசில் இரவு முன்கூட்டியே மின்விளக்குகள் அணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிரும் மின்விளக்குகள் உள்ளது. மேலும் தினந்தோறும் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு இந்த மின் விளக்குகள் ஒளிரும். அதன்பின்னர் மின்விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் தற்போது உக்ரைன் போர் காரணமாக ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுரத்தில் மின்விளக்குகள் சீக்கிரமாக அணைக்க பாரீஸ் நிர்வாக முடிவு செய்துள்ளது. மேலும் வருகின்ற 23-ஆம் தேதி முதல் உள்ளூர் நேரப்படி இரவு 11.45 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்படும் என நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ கூறியுள்ளார். மேலும் பாரீசில் உள்ள பொது கட்டிடங்களில் இரவு 10 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.