Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. டுவிட்டரில் டிரெண்டிங்கான #BoycottHyundai…. பதறிப்போன Hyundai நிறுவனம்….!!!!

பாகிஸ்தானில் உள்ள Hyundai நிறுவனத்தின் டீலர் ஒருவர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் “காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டம்” என்று பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. மேலும் அவருடைய பதிவை கண்டித்து டுவிட்டரில் Hyundai தயாரிப்புகளை புறக்கணிக்கும் விதமாக #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.

இதனால் பதறிப்போன Hyundai இந்தியா நிறுவனம் சமூக வலைத்தளங்களில், 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் தாங்கள் இருப்பதாகவும், தேசத்தை மதிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியுள்ளது. அதேபோல் இந்தியா Hyundai நிறுவனத்தின் இரண்டாவது வீடு என்றும், தேசத்தின் உணர்வுகளை மதிக்காத கருத்துக்கள் வெளியாவதை தங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |