டுவிட்டரில் ப்ளூ டிக் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிறுவனத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெற மாதம் 662 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் அறிவித்தார்.
மேலும் தற்போது ப்ளூ டிக் பயனாளிகளுக்கு தேடுதலில் குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவியாக இருக்கும் எனவும், டுவிட்டரின் தகவல்களை பதிவிடுபவர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு இந்த கட்டணம் உதவும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போலி கணக்குகளை அடையாளம் காணும் வரை ப்ளூ டிக் குறியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.