உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள Ivankiv-ன் துணை மேயர் Maryna Beschastna அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது Maryna Beschastna கூறுகையில், ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து 15, 16 வயதுடைய சிறுமிகளை அண்மையில் சீரழித்துள்ளனர். மேலும் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் உக்ரைன் பெண்கள் பலரும் தற்போது தங்கள் அழகினைக் குறைத்து காட்டுவதற்காக தங்களுடைய தலைமுடியை அதிக அளவில் வெட்டி கொள்கின்றனர். இப்படி செய்தால் தான் அவர்கள் மீது ரஷ்ய வீரர்களின் பார்வை படாது என்று கூறுகின்றனர். உக்ரைனில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த தகவலை துணைமேயர் வெளியிட்டுள்ளார்.