Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா….? நடிகை துனிஷா தற்கொலை வழக்கு…. பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென  படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவருடன்  நடித்த ஷீசன்  கானை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து  எம்.எல்.ஏ. ராம் கதம் கூறியதாவது, “உயிரிழந்த துனிஷா  ஷீஷன் கான் என்பவரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த பிரிவை அவரால்  தாங்கிக் கொள்ள முடியாமல்  தற்கொலை செய்து இருக்கலாம். இந்நிலையில் அவரின்  குடும்பத்திற்கு 100 சதவீதம்  நீதி கிடைக்க வேண்டும். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன  என்பது போலீசாரின் விசாரணை முடிவில் தான் தெரியும். எனவே போலீசார் இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |