மேற்குவங்க மாஜி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி என்னிடம் சொல்லாமல் அறிவித்த பத்மபூஷணை ஏற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சத்ய நாதெள்ளா, சுந்தர் பிச்சை, சவுகார் ஜானகி, நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலரும் பத்ம விருதுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் 128 பேர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பட்டாச்சார்ஜியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்ஜி எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது பற்றி முறைப்படி எதுவும் சொல்லாததால் நான் விருதை ஏற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் “புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது குறித்து இன்று காலை அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.