மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.டி.வி. தினகரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக கடந்த புதன்கிழமை வந்தார். அங்கிருந்து வியாழக்கிழமை பெரம்பலூருக்கு சென்று விட்டு திருநெல்வேலிக்கு செல்வதாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு சரியாக சாப்பிடாமல் கிருமி தொற்று, குடல் தொற்று, நீர்ச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பெற்ற டி.டி.வி. தினகரன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.