Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்….நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…..கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!

சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா,  நீதிபதி முத்துக்குமரன், சராஜ்,பாபுலால்,  சுதாகர், உதய வேலவன்,   கருணாகரன்,  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா பேரணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் வரும் பிரச்சனைகளுக்கு  தாமே தீர்வு கண்டனர். இப்போது நாம் அனைவரும் தனி குடும்பமாக வாழ்வதால்  பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல்  நீதிமன்றத்தை அணுகுகிறோம்.  எனவே இந்த சமரச மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது  பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திலிருந்து திருப்பத்தூர் சாலை வழியாக போக்சோ நீதிமன்றம் வரை விளம்பரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |