உத்தரபிரதேசத்தில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனங்கள் எழுந்தது மட்டுமல்லாமல், போராட்டங்களும் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அவர்கள் அனுமதி இல்லாமலேயே எரித்து அடக்கம் செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்றபோது அவர்கள் தாக்கப்பட்டு, போலீஸ் அடக்குமுறையை சந்தித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் உத்தரபிரதேச இளம் பெண் கொலைக்கு கண்டனம் தெரிவித்து திமுகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
திமுகவின் மகளிர் அணி சார்பாக இன்று மாலை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று மாலை தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விவாதித்து அறிக்கை வழங்க இருக்கும் நிலையில்… திமுக அதே நேரத்தில் போராட்டம் நடத்துவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை அவர்களை சந்திக்கும் மாலையில்தான் திமுகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது மு க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் என்று சொல்லப்படுகின்றது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்