Categories
மாநில செய்திகள்

இதுதான் சான்ஸ்னு அவங்க எல்லாம் அரசியல் பண்றாங்க… அவங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… மு க ஸ்டாலின் பதிலடி…!!!

பேரிடர் காலத்தில் அரசியல் செய்பவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:  “இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் கால்வாய்கள் தூர் வாரப் பட்டால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு பல திட்டங்களை நிறைவேற்றியது. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 68 ஆயிரத்து 602 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த மழை வெள்ளத்தின் போது அரசியல்வாதிகள் லாபத்திற்காக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது” என்று அவர் பேசினார்.

Categories

Tech |