முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பாடல் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இதுதான் திமுகவின் லட்சணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட மோசமான சூழலில் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தான் தேவை. நமது பழம் பெரும் தமிழ் கலாச்சாரத்தை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது பாஜக வேல் யாத்திரை என்று சென்ற போது சினிமா பாணியில் பெண்கள் நடனம் ஆடியதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது? மற்றொரு பக்கம் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசின் 5 ஆண்டு கால வளர்ச்சியை பாருங்கள், அங்கு 5 ஆண்டுகளாகத்தான் பாஜக ஆட்சி இருக்கின்றது. காமராஜர் காலத்தில் இப்படிப்பட்ட அடித்தளம் தான் காரணம். திராவிட ஆட்சியில் ஏதாவது அணை கட்டப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மேலும் அண்ணாமலை ட்வீட்க்கு பதில் ட்வீட் போட்டுள்ள கிஷோர் கே ஸ்வாமி ரெக்கார்ட் டான்ஸ் வரவேற்பு என்பது அவர்களின் கட்சிக் கலாச்சாரமாக இருக்கட்டும். ஆனால் அதற்கு காவலுக்கு நிறுத்தி நடனக் கலைஞர்களை உ.பி.,க்களிடம் இருந்து பாதுகாப்பது நம்ம பணத்தில் என்பது தான் அயோக்கியத்தனம் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் கலை கலாச்சாரம் பண்பாட்டுக்கு எல்லோரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி மிகவும் அவசியமாக இருக்கிறார் என்றால், அவரை தமிழக முதல்வராக வேண்டும் என்று சொல்கிறீர்களா? அண்ணாமலை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்கள்.