Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா…? மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது… ஆர்ப்பாட்டத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு…!!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.  சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்துள்ளார். தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில்  குஷ்பூ பேசிய போது, திமுக தேர்தல் அறிக்கையின் போது விலைவாசியை உயர்த்த மாட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் தற்போது என்ன நடக்கிறது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகின்றது. அதை போல் சொத்துவரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா? முதல்வர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என நினைக்கிறேன் அவர் எழுதிக் கொடுப்பதை தான் படிப்பது வழக்கம். மழைக்காலத்திற்கு முன்பாக முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தினால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறியிருக்கிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்து வருகின்றார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ஏனென்றால் என்னை மிகவும்  மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் நான் புகார் அளித்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன்.  இதுவரை எந்த கருத்தும் அவர் சொல்லவில்லை இதே நிலை திமுகவைச் சேர்ந்த பெண்ணிற்கு ஏற்பட்டிருந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா வீட்டில் கல் எறிவார்கள் வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

இந்தி எதிர்ப்பு எனக் கூறுகின்றார்கள். ஆனால் திமுகவினர் நடத்தி வரும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகின்றார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் மதுவுக்கு எதிரான திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் தற்போது அவர்களது ஆட்சியில் 700 கோடி ரூபாய்க்கு மது விற்றதாக கொண்டாடி வருகின்றார்கள். தமிழ், தமிழ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள் பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது இது தொடரும். மேலும் அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |