Categories
அரசியல்

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா….? டிடிவி தினகரன் சாடல்….!!!

சொத்து வரி உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசுக்கு அமமுக  பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகம் முழுவதும் சொத்து வரியை நூறு சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?

கொரோனா பாதிப்புக்கு பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்பட தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். எனவே சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |