Categories
உலகசெய்திகள்

“இதுதான் நோட்டா ராணுவத்தின் வலிமை”… அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்…!!!!!

நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி இன்று தொடங்கியுள்ளது.

நோட்டா அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டா தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியுள்ளது மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து வான்வெளி மீது நடைபெறும் இந்த பயிற்சியில் மொத்தம் 60 விமானங்கள் வரை பங்கேற்கும்.

மேலும் 30 நாடுகள் இணைந்துள்ள இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நோட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக நாங்கள் திடீரென இப்போது இந்த பயிற்சி ரத்து செய்தால் அது மிகவும் தவறானதாக அமைகிறது போர் வரும் முன்னர் முன்னெச்சரிக்கையாக தடுப்பதே நோட்டாவின் ராணுவத்தின் வலிமை நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |