Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் பழமையான உணவு…. நடைபெற்ற திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள் ….!!

மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டம் கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர்  லட்சுமி, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்ட ‌ பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து விழாவில் காட்சிப்படுத்தினார். மேலும் 435 பேர்  இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு உணவுகளை  ருசித்துள்ளனர்.

Categories

Tech |