குஜராத் பாஜக எம்எல்ஏவும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசியதாவது “நமது நாட்டில் பாலியல் பலாத்காரங்களுக்கு முக்கியமான காரணம் மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை எளிதாக பார்க்க முடிவதுதான். நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடைபெறுவதற்கான மற்ற முக்கிய காரணம் என்னவெனில், பெரும்பாலும் அண்டை வீட்டார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்று தெரிந்தவர்களே அந்த குற்றத்தில் ஈடுபடுவார்கள்.
பாலியல் சம்பவங்களுக்கு நாம் எப்போதும் காவல்துறையை குற்றம் சொல்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்துக்கு ஒரு கறை ஆகும். ஆனால் இதற்கு காவல்துறையை மட்டும் குறை கூற முடியாது. நம் நாட்டிலேயே குஜராத் தான் பாதுகாப்பானது ஆகும். இதனிடையில் ஒரு தந்தை தன் சிறிய மகளை பலாத்காரம் செய்தால், இது ஒரு பெரிய சமூக பிரச்சினை அல்லவா..? அவ்வாறு ஒரு தந்தை தனது மகளை பலாத்காரம் செய்தால் அதற்கு காரணம் அவரது செல்போன்தான் என்று அவர் தெரிவித்தார்.