குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தன்னுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி இவரின் அண்ணன் தங்கை காம்போ செமையாக ஒத்துப்போனது. இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியைக்காண ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடித்துள்ளார். மற்றும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே சினிமாவில் பிசியாக இருப்பதால் குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புகழின் ரசிகர்கள் அவர் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை பார்க்கவே மாட்டோம் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது புகழ் தன் சக போட்டியாளரான பவித்ராவுடன் நெருங்கி பழகி வந்தார் இருவரும் காதலிப்பதாக அவர்களுடைய நட்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு “லவ் யு பார்ட்னர்” என குறிப்பிட்டுள்ளார். இதுதான் புகழின் வருங்கால மனைவி என பேசப்படுகிறது. இதனை தொடர்ந்து பவித்ராவும் “ஹாப்பி பர்த்டே அக்கா” என கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் அக்கா இல்லை அண்ணி என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.