இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒரு காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது. கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அங்கு தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கே போட்டு செல்கின்றனர். ஆனால் அந்த குப்பைகளை அகற்றுவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சவாலை சமாளிப்பதற்காக தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது.
மேலும் வருகின்ற 28-ஆம் தேதி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் புகழ் பெற்ற ஒரு விமான நிலையத்திற்கு இவரது பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.