பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியது. இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த வழக்கு சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது மற்றும் நாடு முழுவதும் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு வருகின்ற 13-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.