மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அண்ணா நகர்-நாஞ்சிக்கோட்டை இடையில் தற்போது நடந்து வரும் 8கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சாலை நமது மாவட்டத்தை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக இருக்கும். இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு நடை பாதையுடன் கூடிய வடிகால் கால்வாய் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 25 கடைகள், பத்து வீடுகள் சரியாக இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியானது 2 மாதத்திற்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்படும் எனவும், இதனால் போக்குவரத்து விரிசல் ஏற்படாது எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.