தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் கோவில் சாலையில் உள்ள ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காவலர் சக்தி பிரசாத், கதிர் , குருசாமி ஆகியோர் அந்த தோட்டத்தின் உரிமையாளரான முத்துராஜிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் முத்துராஜ் தனக்கு இது யானைத் தந்தம் என்று தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் வனத்துறையினர் அந்த தந்தங்களை பறிமுதல் செய்து சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.