ரஷ்யாவின் அடுத்தகுறி தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் கைப்பற்றுவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. ரஷ்யாவின் வான் வழித் தாக்குதல்களை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான ஏவுகணைகளையும், எதிர்த்து தாக்கும் ஆயுதங்களையும் மேற்கு நாடுகள் வழங்கவில்லை. ரஷ்யப்படைகளை விரட்டி அடிக்க தேவையான அனைத்தையும் உக்ரைன் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.