தேவகோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன், சத்தியசிலா, சார்பு அலுவலர் பாலகிருஷ்ணன், காவல்துறையினர் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் 27 போட்டியிடும் 171 வேட்பாளர்கள் குறித்த விவரம், வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளார். மேலும் பதட்டமான வார்டுகளை கண்டறிந்து அந்த வார்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தாங்கள் வார்டுகளில் ஏதேனும் அத்துமீறல் நடைபெற்ற உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.