திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியதுரையான் வாய்க்கால் அருகே கிணறுகள் தடுப்பணைகள் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ராமபட்டிணம்புதூர், சிந்தலவாடம்பட்டி ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாய கிணறுகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியதுரையான் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மூலம் அங்குள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் பெரியதுரையான் வாய்க்கால் அருகில் புதிய தடுப்பணைகள் இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் செலவில் அப்பகுதி விவசாயிகள் கிணறுகளை தூர்வாரி வருகின்றனர். எனவே பெரியதுரையான் வாய்க்கால் அருகில் ஏராளமான தடுப்பணைகள் கட்டி வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.