திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சலூன் கடைகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் சென்ற வருடம் சலூன் கடைகள் கொரோனா தொற்று காரணமாக அடைக்கப்பட்டது. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களான நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டாம். இந்நிலையில் சலூன் கடைகளை மீண்டும் அடைப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.