Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எந்த பாதிப்பும் இல்லை…! பொதுமக்கள் பயப்படாம போட்டுக்கோங்க… மருத்துவ அதிகாரி தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஜீவா ரத்தினம் பொதுமக்களுக்கு தடுப்பூசியினால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜீவா ரத்தினம் கூறியதாவது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்று கூறிய அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மேலும் கொரோனா தடுப்புசி பற்றாக்குறையும் இல்லை என்பதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனாவில் இருந்து மீளலாம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |