Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எந்த பாதிப்பும் இல்ல..! பொதுமக்கள் முன்வர வேண்டும்… வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள்..!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை

கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை ஆயிரத்து 5,100 பேருக்கு போடப்பட்டுள்ளது.

அதில் ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், ஊரக வளர்ச்சி பணியாளர்கள், தனியார் மருத்துவ ஊழியர் ஆகியோருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியினால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சமின்றி முன்வர வேண்டும் என்று வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |