சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை சாலையில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிவகங்கை செல்லும் சாலையில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவல்துறையினர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தினமும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிவேகமாக அந்த பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நடவடிக்கையால் மானாமதுரை பகுதி மக்கள் காவல்துறையினரின் தீவிர வாகன சோதனை குற்றச்செயல்கள் குறையும் என்று வரவேற்பு அளித்துள்ளனர். சிவகங்கை, மானாமதுரை பகுதியில் பெண்கள் நடந்து செல்லும் பாதையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. தற்போது வழிப்பறி சம்பவங்கள் இந்த வாகன சோதனையால் குறையும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.