Categories
மாநில செய்திகள்

இதுனால தான் எனக்கு பிரச்சனை…. கோபத்தில் இவர் செஞ்சத நீங்களே பாருங்க?….!!!!

அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் பைக்கை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சமீப மாதங்களில் மின்சார வாகனங்கள் பழுதடைந்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக் தீவைத்து எரித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கோபிநாதன் என்ற நபர் தனது ஓலா எலக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர் சற்று தூரம் சென்ற பிறகு எலக்ட்ரிக் பைக் பேட்டரி தீர்ந்ததால் அவர் பாதி வழியிலேயே நின்றுவிட்டார்.இதுபற்றி புகார் அளிக்க சர்வீஸ் சென்டருக்கு போன் செய்தும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் யாரும் வரவில்லை.அதனால் விரக்தியடைந்த அவர் கடும் வெயிலில் நடுரோட்டில் தனது பைக்கை தீ வைத்து எரித்து அதன் புகைப்படத்தையும் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சேவை பொறியாளர் அவரை அழைத்து ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் கொடுக்க வேண்டாம் என்றும் மின் பைக்கை மாற்றுவதாகவும் உறுதியளித்தார். ஆனால் பைக்கை அறிவித்தவுடன் நிறுவனத்துடனான எனது உறவு முடிந்து விட்டது என்றே வெளிப்படையாக கூறி போனை வைத்து விட்டார்.

Categories

Tech |