அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு கொண்டு வருவதால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் அமெரிக்க அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதன் மூலம் சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை திட்டமிட்டபடி நடத்தி வருவதால் பணிகளும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் இதுவரை 10 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டுக் கொண்டதாகவும், அமெரிக்க தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 10 கோடி என்பது மொத்த மக்கள் தொகையில் 30.5 சதவீதம் ஆகும். அதேபோல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை 10 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டுக் கொண்டுள்ளனர். அது அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 43.6 சதவீதம் ஆகும் என்று அமெரிக்க தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.