திண்டுக்கல் அருகே திறந்தவெளியில் கொட்டப்படும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிட வசதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவில் அரசு கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சித்தரேவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர இடம் இந்த கொள்முதல் நிலையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் அனைத்தும் நெல்லும் திறந்த வெளியிலேயே குவித்து வைக்கப்படுகிறது. குடிசைப் பகுதியில் இந்த கொள்முதல் நிலையம் அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது.
இதனால் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்படும் நெல் மழைக்காலங்களில் நனைந்து நாசமாகிறது. வெயில்காலத்தில் இந்த கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வெளியில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சித்தரேவு கொள்முதல் நிலையத்தில் நிரந்தர கட்டிட வசதி அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.