Categories
தேசிய செய்திகள்

“இதுபோன்ற பாணியில் அரசு பணியை கோர முடியாது”…. சுப்ரீம் கோர்ட் கருத்து….!!!!!!!!!

மீண்டும் பணி வழங்க கோரி மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்து ஐகோர்ட் 13 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் ஜெய்தீப் குப்தா ஆஜராகி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 7,500 மாத ஊதியத்துடன் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவை அதிகமானோர் வரவேற்றுகின்றனர்.

10 ஆயிரத்து 375 பேர் தமிழக அரசின் முன்மொழிவை ஏற்று பணியில் சேர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் என வாதித்துள்ளனர். அப்போது தமிழக அரசின் முன்மொழிவுகளுக்கு எத்தனை பேர் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர் என நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதற்கு சுமார் 1000 பேர் தமிழக அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளவில்லை என விழுப்புரம் மாவட்ட மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் தனராஜ் தரப்பு வக்கீல் ஹரிப்ரியா வாதித்துள்ளார். உடனடியாக நீதிபதிகள் அரசு காலிப்பணியிடங்களை அதற்குரிய சட்ட விதிகளுடன் நிரப்ப வேண்டும் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற பாணியில் அரசு பணியை கோர முடியாது. மேலும் அரசின் முன்மொழிவை ஏற்று பணியில் சேருங்கள் இல்லை என்றால் அதனை எதிர்த்து வழிகாட்டுங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளனர். இது பற்றி ஆலோசனை தெரிவிக்கப்படும் என அறிக்கை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை  இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |