செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நம் மோடி ஜி கடந்து வந்த பாதையை பார்க்கும் போது நாங்கள் எல்லாம் கடந்து வந்த பாதைகள் எல்லாம் ஒரு தூசி தான். மோடி ஜி அவர்களை வசைபாடாதவர்களே கிடையாது. குஜராத்தில் 2001 இல் இருந்து. அவை அனைத்தையும் தாண்டி மக்களுக்காக சேவை செய்து கொண்டு வருகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்கள் திட்டும்போது ஒரு விஷயம் தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சி இங்கு வந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆல்ட்டர்நேட்டிவ் ஆக வந்துவிட்டது. கருத்தியல் பரிமாற்றத்தில் அதை ஏற்றுக்கொண்டு, நேரடியாக களத்தில் மோத முடியாதவர்கள் ட்விட்டரில் போர் தொடுத்து இருக்கிறார்கள்.
அதையும் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்ளும். இது ட்விட்டர் வார், பேஸ்புக் வார், இன்ஸ்டாகிராம் வார். அதை எவ்வாறு பேஸ் பண்ண வேண்டுமோ அவ்வாறு பேஸ் பண்ணிக் கொள்வோம். எங்களைப் பொருத்தவரை இதற்கெல்லாம் அசைய மாட்டோம். ஏனென்றால் நீங்கள் எறிகின்ற ஒவ்வொரு கல்லையும் எடுத்து அதன் மூலமாக ஒரு கோட்டையை கட்டி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார்.