Categories
அரசியல்

இதுலாம் லாஜிக்கே இல்லை…! எந்த ஒரு தமிழனுக்கும் தெரியும்…!!

திமுக லாஜிக் இல்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு எந்த ஒரு லாஜிக்கான காரணமில்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள். நாங்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்த போது சொல்லியதை தான் இப்போது சொல்கிறோம். ஒரு எதிர்க்கட்சியாக ஆளுகின்ற அரசு செய்கின்ற நல்ல மக்கள் பணிக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுப்பது பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக்கம். நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வருகின்றோம், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அவர்களுடைய சித்தாந்தங்களை மக்களுடைய பூஜை அறையிலே…  கும்பிடுகின்ற கடவுளுக்கு திணிக்க முற்படும் பொழுது மக்களுடைய அறப்போராட்டமாக இது மாறுகிறது.  தமிழகத்தில் 12 இடங்களில்… முக்கியமான கோவில்கள் இருக்கின்ற இடங்களில்… மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலே அங்கெல்லாம் அந்த கோவில்கள் இருக்கிறது. நமக்கு மத நம்பிக்கை இருக்கிறது, ஆண்டவனிடம் நாம் முறையிட்டு இருக்கின்றோம், கேள்வி கேட்டு இருக்கின்றோம் கும்பிட்டுயிருகின்றோம்.

ஆனால் இல்லாத கொரோனாவை காரணம் காட்டி நமக்கு நம்முடைய உரிமை மறுக்கப்படும் பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு வேறுவழியில்லை, இதை மக்கள் போராட்டமாக நடத்த வேண்டிய கட்டாயம். ஒருபுறம் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அரசு சொன்ன போது நாங்கள் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். நிச்சயமாக பள்ளிகளை திறக்க வேண்டும், அதில் கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகள் வீட்டில் இருக்க முடியாது, ஒன்றரை வருஷமா வீட்டில் இருக்காங்க.

இதே அரசு சினிமா தியேட்டரை திறக்கும் பொழுது எங்களுடைய கண்டனக் குரலை கொடுத்தோம். ஏனென்றால் கோவிலை மூடுவதற்கு ஒரு காரணம் சொல்கிறீர்கள். ஆனால் சினிமா தியேட்டரை திறப்பதற்கு நீங்கள் சொல்கின்ற காரணம் விசித்திரமாக இருக்கிறது. எதிர்கட்சியாக இருந்தபோது கொரோனாவை காரணம் காட்டி டாஸ்மார்க் வேண்டாம் என்று சொன்ன அரசு, ஆளும் கட்சியாக வந்த பிறகு மிக வேகமாக ஒரு புயல் வேகத்தில் டாஸ்மாக்கை திறந்து இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது எந்த ஒரு தமிழனுக்கும் கூட தெரியும் கோவிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் கிடையாது என்று. இதே அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன சொன்னார்கள்   என்றால் ? மத்திய அரசு போடுகின்ற எந்த கொரோனா சம்பந்தப்பட்ட முடிவுகளையும் கூட நாங்கள் ஏற்கமாட்டோம் என தெரிவித்தார்.

Categories

Tech |