Categories
சினிமா தமிழ் சினிமா

இதுல அம்மா யாரு…? பொண்ணு யாருனே தெரியல…. இவ்ளோ அழகா இருக்காங்களே…. நீங்களே பாருங்க…!!!!

அஜித் தனது குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. சுட்டிக் குழந்தையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஷாலினி ஆனபின்  ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், பிரசாத் ஆகியோருடன் நடித்துள்ளார்.  ஷாலினி,அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது.

அதன்பின் இருவரும் 2000 ம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனஷ்கா  என்ற மகளும்,  ஆத்விக்  என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி, ஷாலினியின் மகள் அனஷ்கா ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் யார் அம்மா? யார் மகள்? என்று சொல்ல முடியாத அளவிற்கு மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கின்றனர்.  சமீபத்தில் அஜித் குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் மனைவி, மச்சினிச்சி  மற்றும் மகள் ஆகியோர் இருக்கும் போட்டோவும் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |