மதுரையில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஆனையூரில் நவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நவீனும், அவரது நண்பர்களும் அலங்காநல்லூரில் இருக்கும் தனிநபர் கிணற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது நவீன் கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முற்பட்டதால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நவீனை வெளியே இழுக்க முயற்சி செய்தும் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.