ராணிப்பேட்டையில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து அதிகளவு புகை வெளியேறி காற்றுடன் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.