எதற்காக Pisa tower-ஐ கோபுரத்தை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த கோபுரத்தை 1172-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்தனர். சுமார் 5 வருடம் கழித்து 2 மாடி கட்டி முடித்தவுடன் அந்த கட்டிடம் சாய ஆரம்பித்தது. ஏனென்றால் இந்த கட்டிடத்தின் பேஸ்மென்ட் 3 அடி மட்டுமே இருந்தது. மேலும் அந்த பேஸ்மென்டுக்கு கீழே களிமண் மற்றும் ஈரமான மணல் இருந்துள்ளது. எனவே மணல் காய்வதற்காக 100 வருடங்கள் காத்திருந்தனர். இதனை அடுத்து 1272-ஆம் ஆண்டு 3-வது மாடி கட்ட ஆரம்பித்த சில நாட்களிலேயே போர் தொடங்கியது. இதனால் கட்டிட பணியை தள்ளி போட்டனர். அடுத்த 199 வருடங்களுக்கு பிறகு அந்த கட்டிடத்தை கட்டி முடித்தனர்.
இது கட்டி முடித்து 500 ஆண்டுகள் ஆன நிலையில், கோபுரம் சாய்ந்தும் கீழே விழாமல் இருந்ததால் 1987-ல் இதனை உலக அதிசயத்தில் ஒன்றாக அறிவித்தனர். ஆனால் அடுத்த 5 வருடங்களில் இத்தாலி அரசாங்கம் பொதுமக்கள் இந்த கோபுரத்திற்கு செல்ல தடை விதித்தது. அதன் பிறகு இந்த கட்டிடத்தை நேராக்குவதற்காக அதன் பேஸ்மென்டில் இருந்து சில களிமண்ணை எடுத்தனர். இதனையடுத்து மணலை வெளியே எடுத்த இடத்தில் 600 டன் எடையை சில நாட்கள் வைத்திருந்தனர். அதன்பின் கோபுரத்தை 4 டிகிரி உயர்த்தி 2001-ல் அதனை Reopen செய்தனர்.