இடத்தில் உரிமை கேட்டு 4 பேர் இணைந்து சகோதரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏ. கொத்தப்பள்ளி கிராமத்தில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் சொன்னப்பா என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாராயணப்பா, நஞ்சப்பா, சின்னப்பா, சுப்பிரமணி ஆகியோர் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் முனிராஜ் மற்றும் சொன்னப்பாவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முனிராஜ் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணி என்பவரை கைது செய்து, தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.