வீட்டின் முன்பு இருந்து பெட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தலிங்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நேற்று 2 அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெடி குண்டு இருக்கும் என்ற நினைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் காலி மது பாட்டில்கள் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 அட்டைப்பெட்டிகளையும் முருகேசனின் வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.