அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடோ பழிவாங்கும் எண்ணத்தோடோ நடத்துவது இல்லை என்றும் தனது வீட்டில் கூட ஏற்கனவே சிபிஐ, சிபிசிஐடி சோதனை நடைபெற்றதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எப்பொழுது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுகிறதோ, அப்பொழுதுதான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
என்னுடைய வீட்டில் கூட பலமுறை சோதனை செய்து இருக்கிறார்கள். சிபிஐ, சிபிசிஐடி ரெய்டு செய்துள்ளார்கள். அதில் என்ன இருக்கிறது. அதில் ஒன்றும் கோபப்பட ஒன்றுமே இல்லை. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. மடியில் கனம் இருந்தால் தான் பயம் இருக்கும் அதை நியாயப்படுத்த ஏதாவது உளறலாம் என்று கூறியுள்ளார்.