Categories
தேசிய செய்திகள்

“இதுல என்ன தப்பு இருக்கு…??” ஏர் இந்தியா நிறுவன விற்பனை வழக்கில் ஐகோர்ட் அதிரடி…!!

இந்திய அரசின் வான்வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு இந்திய அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததாக ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏர்-இந்தியா நிறுவனம் டாட்டாவின் கைக்கு மாற்றப்பட்டதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் தக்கவைத்துக்கொள்ள படுவார்களா.? மற்றும் அவர்களின் ஓய்வு காலம் வரை பணிக்கு உத்திரவாதம் உண்டா.? போன்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் அரசின் முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏர்இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஒரு லட்சம் கோடி வரையிலான மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கவே அரசு இந்த முடிவெடுத்துள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். அதோடு பங்கு விற்பனை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் நீதிமன்றம் தலையிடாது எனவும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு விற்றதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |