Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதுல கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் பாதாள சாக்கடை குழியினுள் வாலிபர் தவறிவிழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் அடிப்படையில் 1,000 கோடி மதிப்பீடு தொகையில் பலவிதமான கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக அதனை சுற்றி பிளாஸ்டிக் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகே பொதுமக்கள் செல்வதற்காக சிறிய பாதை ஒன்று போடப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்களும், மோட்டார் சைக்கிளும் இந்த வழியாக செல்வதுண்டு. இந்த நிலையில் மந்திரமூர்த்தி என்கின்ற வாலிபர் சைக்கிளில் செல்லும்போது டவுன் அருகே தோண்டப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியினுள் தவறி விழுந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |